சனி, ஆகஸ்ட் 21, 2010

வாழும் முறைகளில் நன்மை பயப்பவைகளில் சிறந்தவை -பாகம் 5

ஆச்சார்யர் சரகரின் -சிறந்தவைகளில் சிறந்தவை என விளக்கப்பட்டவை இவைகள் இது ...

81. கண்களுக்கு நன்மை பயப்பதும், விந்துவை
வளர்ப்பதும் தலைமுடி, குரல், நிறம் இவற்றிற்கு
நன்மை பயப்பதும் என இவற்றில் - அதிமதுரம்;

82. உயிரூட்டம் தரும் பொருட்களில்  - காற்று

83. அசீரணநோய், அசைவற்றுப் போதல்,
குளிர்ச்சி, வலி, நடுக்கம் ஆகியவற்றை 
நீக்கும் பொருட்களில்  - நெருப்பு
84. வாதம் முதலியவை தேக்கிவைக்கும்
பொருட்களில் - தண்ணீர்

85. நீர் வேட்கை, வாந்தி இவைகளைப் 
போக்குவதில் - மண்ணைச் சூடாக்கிக் கல்லை  கல்லைச் சூடாக்கித் தண்ணீரில் தணித்து எடுத்து வைக்கப்பட்ட நீர்


86. ஆற்றலை வளர்ப்பதில் - சீரண ஆற்றலுக்கு ஏற்ப உணவு உட்கொள்ளுதல், உடலுக்கு 
ஏற்றதான உணவும் செயலும்  மேற்கொள்ளுதல்.

87. ஆரோக்கியமானவைக்கு - தக்க காலத்தில் உணவு


89. நன்கு சீரண ஆற்றலைத் தருவதில் - ஒரு வேளை உணவு 
உட்கொள்ளுதல்

90. நன்மையளிப்பது - அடக்கமும், சாந்தியும்

91. ஆயுளை வளர்ப்பது - சிற்றின்ப எண்ணமின்றி,
புலன் அடக்கத்துடன், பிரம்மசர்யம்
மேற்கொள்ளுதல்.

92. ஆண்மை வளர்ப்பது - மன உறுதி

93. களைப்பபைப் போக்குவதில் - குளித்தல்

94.கிழ்ச்சியூட்டுவதில் - நகை

95. உடலை உலர்த்துவதில் - வருத்தம்

96. உடல் வளர்ச்சியில் - பற்றற்ற தன்மை

97. உறக்கம் தருபவையில் - நல்ல வளர்ச்சி

98. வலிமை தருவதில் - பலசுவைப் பொருட்களை 
உண்ணுதல்

99. உடன் நீக்க வேண்டியவற்றுள் - அசீரணம்

100. மென்மையான மருந்து சிகிச்சையில் - குழந்தைகள் உணவும் செயலும்

101. தொடர்ந்த சிகிச்சை முறையில் - வயோதிகர்கள்

102. கடுமையான மருந்து, உடற்பயிற்சி
புணர்ச்சி இவற்றைவிட வேண்டியவர்களுள் - கருவுற்ற பெண்

103. கருதரிக்கும் பொழுது - மன மகிழ்வு

104. சிகிச்சை செய்ய முடியாதது - ஸன்னிபாதம்

105. முரண் சிகிச்சையில்  - ஆம சிகிச்சை

106. பஞ்ச கர்மாக்களில் - வஸ்தி கர்மா

107. மூலிகை விளையும் இடங்களில் - இமயமலை

108. ஆரோக்கியம் அளிக்கும் இடங்களில் - பாலைவனம்

109. மூலிகைகளில் - ஸோமலதை

110. மருத்துவ குணங்களில் - தக்கமுறையில் சிகிச்சை   
கையாளுதல்.

111. ஆரோக்கிய அறிகுறிகளில் - தன்னம்பிக்கை

112. ஐயங்களைத் தீர்ப்பனவற்றுள் - மருத்துவர்கள் அடங்கிய கூட்டம்.

113. சிகிச்சை முறைகளில் - நூலறிவுடன் கூடிய ஊகம்

114. காலத்தை பற்றிய அறிவை
பயன்படுத்துவதில் - உயர்ந்த நேரான அறிவு

115. ஐயம் அகற்றும் செயல்களில் - நல்ல பட்டறிவு

116. அச்சம் விளைவிப்பது - ஆற்றல் இன்மை

117. அறிவை வளர்க்கும் செயல்களில் - உடன்பயின்றவருடன் கற்ற
நூல்களைப் பற்றி வாதம் புரிதல்.

118. சாத்திர அறிவு பெறும்  காரணங்களில் - ஆசாரியன்

119. அழிவற்றவைகளில் - ஆயுர்வேதம்

120. கடைபிடிக்க வேண்டியவை  - நல்லோர்  நல்லூரை

121. நோய் தீரும் குறிகளில் - வெறுப்பு அடையாதிருத்தல்

122. எல்லா சுகங்களையம் தருவது - சொல், செயல் மனம் 
அனைத்தையும் இறைவனிடம்
ர்ப்பணித்தல்

இவை யாவும் சிறந்தவையாகக் கூறப்பட்டன.

மேற்கூறிய 122 பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வது இன்றியமையாதது என விளக்கப்பட்டது.

Post Comment

2 comments:

jagadeesh சொன்னது…

மிக மிக அருமை.

curesure Mohamad சொன்னது…

ஜெகதீஷ் நண்பரே ..நன்றி ..தங்களது கருத்துரைக்கு நன்றி

கருத்துரையிடுக